திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்நிறுவனர் பிறந்தநாள் விழா

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நிறுவனர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update:2023-09-29 00:15 IST

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்றோர் கழகம் சார்பில் கல்லூரி நிறுவனர் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் மற்றும் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி நடைபெற்றது. இப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். இவ்விழாவிற்கு ஆதித்தனார் கல்வி நிலையத்தின் செயலாளர் நாராயணராஜன் முன்னிலை வகித்தார். பயின்றோர் கழக செயலாளர் ஜெயவேல் வரவேற்று பேசினார். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு ஆதித்தனார் கல்வி நிலையத்தின் மேலாளர் தி.வெங்கட்ராமராஜ் பரிசுத்தொகையை வழங்கி பாராட்டினார். பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டியில் முதலிடம் பிடித்த மெஞ்ஞானபுரம் இ.டி.மேல்நிலைப்பள்ளி மாணவி ராகவிக்கு ரூ.1,500 பரிசுத்தொகையும், சான்றிதழும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் முதலிடம் பிடித்த பிறைகுடியிருப்பு சிவந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி பவித்ராவுக்கு ரூ.1,500 பரிசு தொகையும், 2-ம் இடம் பிடித்த கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி மாணவி ரோஸ்ஸரி அனிசாவுக்கு ரூ.1,000-மும், 3-ம் இடம் பிடித்த சாயர்புரம் போப் கல்லூரி மாணவி இசக்கியம்மாளுக்கு ரூ.750 பரிசுத்தொகையும், சான்றிதழும் வழங்கப்பட்டது. ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார், பயின்றோர் கழக பொருளாளர் சித்திரை ராஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஆதித்தனார் கல்லூரி முன்னாள் மாணவரும், சென்னை ஹோமியோபதி மருத்துவருமான என்.ஆர்.ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இணைச்செயலாளர் அ.தர்மபெருமாள் நன்றி கூறினார். இவ்விழாவிற்கான ஏறபாடுகளை பயின்றோர் கழக செயலாளர், இணைச்செயலாளர் தர்மபெருமாள், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர். விழாவில் கல்லூரி பேராசிரியர்களும், மாணவ, மாணவியரும் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்