திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வினியோகிக்கப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில், தேசிய குடற்புழு நீக்க நாளினை முன்னிட்டு, நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் சோனகன்விளை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் குடற்புழு நீக்க மாத்திரைகள் மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர்(பொறுப்பு) ரா.முத்துக்கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் ஆரம்ப சுகாதார செவிலியர்கள் ஜெபா கிறிஸ்டி, சண்முகலட்சுமி, அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை,பேராசிரியர் மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட அலுவலர் அபுல்கலாம் ஆசாத் செய்திருந்தார்.