ஸ்ரீவில்லிபுத்தூரில் கொத்தனார் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு
கொத்தனார் வீட்டில் 12 பவுன் நகை திருடி சென்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் அருகே உள்ள பெருமாள் சேரி ஊரை சேர்ந்தவர் அர்ஜுனன். கொத்தனார். இவருடைய மனைவி மரகதம். இவர் விவசாய பணிகள் செய்து வருகிறார். இந்தநிலையில் 2 பேரும் வீட்டை பூட்டி விட்டு சாவியை வீட்டின் ஒரு பகுதியில் வைத்து விட்டு சென்றனர். பின்னர் அவர்கள் மாலையில் வந்து பார்த்த போது வீடு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 12 பவுன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.