சத்தியமங்கலம், கோபி கூட்டுறவு சங்கங்களில்ரூ.7½ லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்

சத்தியமங்கலம், கோபி கூட்டுறவு சங்கங்களில் ரூ.7½ லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம் போனது.

Update: 2023-07-29 21:41 GMT

சத்தியமங்கலத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் வாழைப்பழம் ஏலம் நடைபெற்றது. இதற்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 1,854 வாழைத்தார்களை கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் கதலி வாழைப்பழம் கிலோ ஒன்று 55 ரூபாய்க்கும், நேந்திரன் வாழைப்பழம் ரூ.41-க்கும் விற்பனை ஆனது. பூவன் (தார் ஒன்று) ரூ.480-க்கும், தேன்வாழை ரூ.580-க்கும், செவ்வாழை ரூ.860-க்கும், ரஸ்தாளி ரூ.480-க்கும், பச்சை நாடன் ரூ.360-க்கும், ரொபஸ்டா ரூ.460-க்கும், மொந்தன் ரூ.405-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வாழைத்தார்கள் மொத்தம் ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 920-க்கு ஏலம் போனது.

இதேபோல் கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. மொத்தம் 3,370 தார் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதில் கதலி ரகம் கிலோ ரூ.51-க்கும், நேந்திரன் ரூ.40-க்கும் ஏலம் போனது. பூவன் (தார்) ரூ.410-க்கும், தேன் வாழை ரூ.550-க்கும், செவ்வாழை ரூ.710-க்கும், பச்சை நாடன் ரூ.410-க்கும், ரொபஸ்டா ரூ.310-க்கும், ரஸ்தாலி ரூ.50-க்கும், மொந்தன் ரூ.300-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.5 லட்சத்து 23 ஆயிரத்துக்கு விற்பனையானது.

மேலும் தேங்காய் ஏலம் நடைபெற்றது. 7 ஆயிரத்து 750 தேங்காய்கள் கொண்டுவரப்பட்டு இருந்தன. இதில் சிறிய தேங்காய் ரூ.7-க்கும், பெரிய தேங்காய் 12 ரூபாய் 80 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.71 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனையானது. சத்தியமங்கலம், கோபி கூட்டுறவு சங்கங்களில் ரூ.7லட்சத்து 49 ஆயிரத்து 920-க்கு வாழைத்தார்கள் விற்பனையானது.

Tags:    

மேலும் செய்திகள்