ஓமலூர் கஞ்சநாயக்கன்பட்டியில்திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்திரளான பக்தர்கள் தரிசனம்

ஓமலூர் கஞ்சநாயக்கன்பட்டியில் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-02-01 20:50 GMT

ஓமலூர், 

திரவுபதி அம்மன் கோவில்

ஓமலூரை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியில் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது. அன்று காலை யாகசாலை முகூர்த்தக்கால் நடுதல், கங்கணம் கட்டுதல், அனைத்து வீடுகளிலும் பாலிகை இடுதல் நடந்தது. 29-ந் தேதி இரவு 8 மணிக்கு கிராம சாந்தியும், 30-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு மங்கள கணபதி பூஜை, சங்கல்பம், அனுக்ஞை, புண்யாகவாகனம், பஞ்சகவ்யம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பல்வேறு யாகம் மற்றும் பல்வேறு பூஜைகள் நடந்தன.

நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு சிவாச்சாரியார்கள் விசேஷ சந்தி, பூதசுத்தி செய்து யாகசாலைக்கு அழைத்து வருதல், 9 மணிக்கு கோபுர கலசம் புதிய சாமி சிலைகளுக்கு அதிவாச கிரியைகள், கோபுரத்தில் தானியம் நிரப்புதல், 2-ம் கால யாகசாலை பூஜை, 3-ம் கால யாகபூஜை ஆகியன நடந்தது.

கும்பாபிஷேகம்

நேற்று காலை 6 மணிக்கு விநாயகர் வழிபாடு புண்யாகம், பஞ்சகவ்யம், காலை 6.30 மணிக்கு நால்வேதம், 4-ம் கால வேள்வி பூஜை, வேதிக மண்டப ஆராதனை, வேத சிவாகம முறை, பாராயணம், சாமி சிலைகளுக்கு பிம்பசுத்தி, நாடி சந்தானம் நடந்தது.

தொடர்ந்து காலை 9 மணிக்கு திரவுபதி அம்மன் கோபுர விமானத்துக்கு கும்பாபிஷேகம், காலை 10 மணிக்கு பரிவார தெய்வமான பஞ்சபாண்டவர், மாயக்கண்ணன், குந்தி தேவிக்கு கும்பாபிஷேகமும், 10.15 மணிக்கு திரவுபதி அம்மனுக்கு கும்பாபிஷேகமும்,, காலை 11.30 மணிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரமும் நடந்தது.

திருக்கல்யாணம்

மாலை 5.30 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு சுவாமி வீதி உலாவும் நடந்தது. கும்பாபிஷேக விழாவில் காஞ்சீபுரம் அருள்வாக்கு சித்தர் 108 சக்தி பீடாதிபதி கலந்து கொண்டு அருளாசி வழங்கினார்.

ஏற்பாடுகளை ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் இளங்கோவன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் ராஜேந்திரன், மணி, வேடப்பன், அப்புதுரை, நாராயணன், சேவி கவுண்டர் மற்றும் பூசாரிப்பட்டி பெரிய வீட்டுக்காரர் வகையறாக்கள் அர்ச்சகர்கள் வகையறாக்கள் செய்திருந்தனர்

Tags:    

மேலும் செய்திகள்