நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில்கால்பந்து செயற்கை புல்தரைமைதானம் திறப்பு விழா

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் கால்பந்து செயற்கை புல்தரை மைதானம் திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2023-08-13 18:45 GMT

நாசரேத்:

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கால்பந்து செயற்கை புல்தரை மைதானம் திறப்பு விழா நடைபெற்றது. தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல குருத்துவ செயலர் இம்மானுவேல் வான்ஸ்றக் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். கல்லூரியின் பாடல் குழுவினர் சிறப்பு பாடல்பாடினர். கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் வரவேற்று பேசினார். தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல உப தலைவர் தமிழ்செல்வன் மைதானத்தை ஆசீர்வதித்து ஜெபித்தார். திருமண்டல லே செயலர் மற்றும் திருமண்டல கல்லூரிகளின் நிலைவரக் குழு செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் மைதானத்தை திறந்து வைத்தார். திருமண்டல உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங் கல்வெட்டை திறந்து வைத்தார். புதிய மைதானத்தில் நாசரேத் வெட்ரன்ஸ் அணியினர் மற்றும் லு. ஆ.ஊ.யு. அணியினருக்கு இடையே நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற நாசரேத் வெட்ரன்ஸ் அணியினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் நாசரேத் மர்காஷியஸ் மேல் நிலைப்பள்ளி முதல் இடத்தையும், பியர்ல்ஸ் பப்ளிக் பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். விழாவில் மர்காஷிஸ் சபை மன்ற தலைவர் வெல்ட்டன், நாசரேத் கதீட்ரல் தலைமை குருவானவர் மர்காஷிஸ் டேவிட் வெஸ்லி, நாசரேத் மர்காஷியஸ் மேல் நிலைப்பள்ளி தாளாளர் சுதாகர், தூய பெண்கள் மேல் நிலைப்பள்ளி தாளாளர் வயோலா மர்காஷிஸ் மற்றும் தலைமை ஆசிரியை ஜூலியட், புனித லூக்கா மருத்துவமனை நிர்வாகி பிலிப் ஜெயசிங், புனித லூக்கா சமுதாயக் கல்லூரி தாளாளர் செல்வின், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், நாசரேத் சேகர மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரி பர்சார் தனபால் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்