கோவில்பட்டியில், வருகிற 10-ந் தேதி பா.ஜனதா கட்சி மாநாடு
கோவில்பட்டியில், வருகிற 10-ந் தேதி பா.ஜனதா கட்சி மாநாடு நடக்கிறது. இதில் மாநிலதலைவர் அண்ணாமலை பங்கேற்கிறார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி சாலைப்புதூர் மைதானத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜனதா கட்சி அனைத்து அமைப்புகள், பிரிவுகள் சார்பில் மாற்றத்திற்கான மாநாடு வருகிற 10-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. மாநாட்டில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் பொன். பாலகணபதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
ஏற்பாடுகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமையில் மாவட்ட அனைத்து அணி, பிரிவு நிர்வாகிகள் செய்து வருகின்றனர். மாநாட்டு பந்தல் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியை மாநில பொதுச் செயலாளர் பொன். பாலகணபதி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர், பட்டியல் அணி மாநில பொதுச் செயலாளர் சிவந்தி நாராயணன் ஆகியோர் பார்வையிட்டனர்.