கோவில்பட்டியில், 21-ந்தேதிமின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

கோவில்பட்டியில், 21-ந்தேதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

Update: 2023-03-16 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற் பொறியாளர் மு. சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவில்பட்டி மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மேற்பார்வை பொறியாளரால் நடத்தப்பட இருக்கிறது. கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து, பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்