ஈரோட்டில்மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்

Update: 2023-08-28 20:19 GMT

தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் சார்பில், ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள தொழிலாளர் நல அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சங்கரன் தலைமை தாங்கினார்.

மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். 8 மணி நேர வேலை, பி.எப்., இ.எஸ்.ஐ. பிடித்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் மருந்து விற்பனை பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர

Tags:    

மேலும் செய்திகள்