ஈரோடு சூளையில் ஆபத்தான குழியால் வாகன ஓட்டிகள் அவதி

வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-10-15 19:30 GMT

ஈரோடு சூளை முதலிதோட்டம் எல்.வி.ஆர்.காலனிக்கு செல்லும் சாலையில் பாதாள சாக்கடை மூடியில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு கழிவுநீர் வெளியேறுகிறது. மழை பெய்யும்போது சாலையில் தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்பதால் குழி இருப்பது தெரிவதில்லை. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் குழியில் சிக்கி தடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள். எனவே ஆபத்தான குழியை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்