மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டி

கம்பத்தில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டி நடந்தது

Update: 2022-11-08 05:15 GMT

தேனி மாவட்ட அளவிலான அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் 21-ந்தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. பள்ளி விளையாட்டு மைதானத்தின் அடிப்படையில் தடகள போட்டி, வாலிபால் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி கம்பம் சி.பி.யூ. மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாணவர்களுக்கான கபடி போட்டி நேற்று நடைபெற்றது. தேனி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் இளங்கோ தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 14, 17 ,19 வயதிற்கான ஒவ்வொரு பிரிவிலும் தலா 8 அணி வீதம் மொத்தம் 24 அணிகள் கலந்து கொண்டன. இதில் வெற்றி பெறுபவர்கள் செங்கல்பட்டு, தர்மபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்படுவதாக பயிற்சியாளர்கள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்