குன்னூர் ரெயில் நிலையத்தில்ஓணம் பண்டிகையை கொண்டாடிய ஊழியர்கள்

குன்னூர் ரெயில் நிலையத்தில் ஊழியர்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.

Update: 2023-08-17 18:45 GMT

குன்னூர்:  கேரளாவில், ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படும். மகா விஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒன்றான வாமனரின் பாதத்தை தலையில் சுமந்த மகாபலி மன்னன், கேரள மக்களின் வீடுகளில் வாசம் செய்வதாக நம்பிக்கையே ஓணம் பண்டிகை கொண்டாட்டம் என்று கூறப்படுகிறது.

இதனால் மகாபலி மன்னனை வரவேற்க 10 நாட்கள் வீட்டு வாசலில் அத்தப்பூ கோலமிட்டு, புத்தாடை அணிந்து கோவில்களுக்கு சென்று சாமி கும்பிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு வருகிற 29-ந்தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி குன்னூர் ெரயில் நிலையத்தில் ரெயில்வே ஊழியர்கள் சார்பில் நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. முன்னதாக ரெயில்வேயில் பணிபுரியும் ஆண்கள், பெண்கள் முறையே பாரம்பரியமிக்க கேரள சேலை, வேட்டி-சட்டை அணிந்து கலந்துகொண்டனர். மேலும் ரெயில் நிலைய வளாக பகுதியில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினர். அப்போது ரெயில் பயணிகள் சிலரும் சேர்ந்து அவர்களுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். மேலும் அத்தப்பூ கோலத்துடன் சேர்ந்து ரெயில்வே ஊழியர்கள், பயணிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்