சீனாபுரம் சந்தையில் விர்ஜின் கறவை மாடு ரூ.40 ஆயிரத்துக்கு விற்பனை

சீனாபுரம் சந்தையில் விர்ஜின் கறவை மாடு ரூ.40 ஆயிரத்துக்கு விற்பனையானது.

Update: 2023-06-09 19:45 GMT

பெருந்துறை

சீனாபுரம் சந்தையில் விர்ஜின் கறவைமாடு ரூ.40 ஆயிரத்துக்கு விற்றது.

மாட்டுச்சந்தை

பெருந்துறை சீனாபுரத்தில் நேற்று மாட்டுச்சந்தை நடைபெற்றது. சேலம் மாவட்டம் முத்தநாய்க்கன்பட்டி, தருமபுரி மாவட்டம் காரிமங்கலம், நாமக்கல் மாவட்டம் மோர்ப்பாளையம் ஆகிய ஊர்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இருந்தன.

விர்ஜின் கலப்பின கறவை மாடுகள் 75-ம், இதே இன கிடாரி கன்றுகள் 100-ம் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.

சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடுகள் 60-ம், இதே இன கிடாரி கன்றுகள் 100-ம் விற்பனைக்கு வந்திருந்தன.

விலை குறைந்தது

விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையிலும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையிலும் விற்பனை ஆனது.

சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடு ஒன்று ரூ.18 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.7 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரையும் விற்றது.

ரூ.75 லட்சத்துக்கு மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் கூறினர். கடந்த வாரத்தைவிட நேற்று நடந்த சந்தையில் மாடுகள் விலையும் குறைந்திருந்தது. கடந்த வாரம் ரூ.50 ஆயிரத்துக்கு விற்ற விர்ஜின் கலப்பின கறவை மாடு நேற்று நடந்த சந்தையில் ரூ.40 ஆயிரத்துக்கு விற்றது. இதே இன கிடாரி கன்று கடந்த வாரம் ரூ.40 ஆயிரத்துக்கு விற்றது. நேற்று விலை குறைந்து ரூ.30 ஆயிரத்துக்கே விலை போனது.

Tags:    

மேலும் செய்திகள்