பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம்

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

Update: 2022-08-26 21:31 GMT

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. தர்மபுரி, சேலம், கொளத்தூர், கொங்கணாபுரம், மேட்டூர், பெருந்துறை, பவானி, அந்தியூர், அம்மாபேட்டை ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 4 ஆயிரத்து 395 மூட்டைகளில் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தார்கள். இதில் பி.டி. ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்ச விலையாக 10 ஆயிரத்து 712 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 12 ஆயிரத்து 209 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம் 1 கோடியே 52 லட்சத்து 48 ஆயிரத்து 72 ரூபாய்க்கு விற்பனையானது. கோவை, அன்னூர், புஞ்சைபுளியம்பட்டி, சத்தியமங்கலம், தர்மபுரி, திருப்பூர் கொங்கணாபுரம், பெருந்துறை, பவானி, அந்தியூர் பகுதி வியாபாரிகள் பருத்தியை வாங்கிச்சென்றார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்