ஆத்தூரில்ரூ.38 லட்சத்தில் வேளாண் விரிவாக்க மையத்திற்கு புதிய கட்டிடம்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

ஆத்தூரில் ரூ.38 லட்சத்தில் வேளாண் விரிவாக்க மையத்திற்கு புதிய கட்டிடத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

Update: 2023-07-25 18:45 GMT

ஆறுமுகநேரி:

ஆத்தூரில் ரூ.38 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

வேளாண் விரிவாக்க மையம்

ஆத்தூரில் வட்டார வேளாண் விரிவாக்க மையம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் ஆத்தூர் தெற்கு ரத வீதியில் புதிய வேளாண் விரிவாக்க மையக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று காலையில் நடைபெற்றது. புதிய கட்டிடத்தை தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி, வேளாண் துறை இணை இயக்குனர் பாலசுப்பிரமணியம், துணை இயக்குனர் ஜின் கின் பிரபாகர் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் அரசு உழவர் நலத்துறை சார்பில் 2பேருக்கு வயல்களுக்கு மருந்து தெளிக்கும் எந்திரம், மற்றும் பாரம்பரிய நெல் விதைகள், தென்னங்கன்றுகள், ஆகியவற்றை விவசாயிகளுக்கு அமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் வேளாண்துறை உதவி இயக்குனர் சுரேஷ், திருச்செந்தூர் உதவி கலெக்டர் குரு சந்திரன், தாசில்தார் வாமனன், தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், மேலாத்தூர் கிராம பஞ்சாயத்து தலைவர் ஏ.பி. சதீஷ்குமார், மேலாத்தூர் பஞ்சாயத்து துணைத்தலைவர் பக்கீர் முகைதீன், ஆத்தூர் நகர பஞ்சாயத்து தலைவர் ஏ.கே

கமால் தீன், ஆத்தூர் நகர தி.மு.க. செயலாளர் எம். பி.முருகானந்தம், ஆத்தூர்குளம் கீழ் பகுதி விவசாயிகள் சங்கத் தலைவர் சி.பி.செல்வம் மற்றும் நிர்வாகிகள், நகர பஞ்சாயத்து உறுப்பினர்கள், மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சோனகன்விளை

இதேபோன்று அம்மன்புரம் அருகே உள்ள சோனகன்விளையில் வேளாண்மை பொறியியல் சார்பில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கானம் டவுன் பஞ்சாயத்து தலைவர் வெங்கடேஷ்வரி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர், துணை வேளாண்மை விரிவாக்க மையத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். தொடர்ந்து விவசாயிகளுக்கு அவர் வேளாண் கருவிகளை வழங்கினார். இவ்விழாவில் இதில் திருச்செந்தூர் உதவி கலெக்டர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், தி.மு.க. வர்த்தக அணி இணை செயலாளர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்், அம்மன்புரம் பஞ்சாயத்து தலைவர் ஞானராஜ், மேலப்புதுக்குடி பஞ்சாயத்து துணை தலைவர் கண்ணன், கானம் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் வேல்சாமி, திருச்செந்தூர் நகராட்சி துணைத்தலைவர் செங்குழி ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் சார்பில் 79 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் தலைமை தாங்கி மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி பேசினார்.

முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியை அன்னலட்சுமி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் நடந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவி ஜெயராணியை பாராட்டி அமைச்சர் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ஆகியோர் பேசினா். நிகழ்ச்சியில் அனைவருக்கும் கல்வி திட்ட உதவி அலுவலர் முனியசாமி, திருச்செந்தூர் உதவி கலெக்டர், தாசில்தார், ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து துணை தலைவர் ஏ.கல்யாண சுந்தரம், நகர தி.மு.க. செயலாளர் ஏ.கே. நவநீதபாண்டியன், திருச்செந்தூர் நகராட்சி துணைத்தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்