அந்தியூர், சிவகிரி, கோபி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.19¾ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்

அந்தியூர், சிவகிரி, ேகாபி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.19¾ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம் போனது.

Update: 2023-05-26 00:52 GMT

அந்தியூர், சிவகிரி, ேகாபி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.19¾ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம் போனது.

அந்தியூர்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், வெள்ளித்திருப்பூர், ஒலகடம், எண்ணமங்கலம், கோவிலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களுடைய விவசாய விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 7 ஆயிரத்து 257 தேங்காய்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இது கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.18.25-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.22.70-க்கும் என மொத்தம் ரூ.89 ஆயிரத்து 595-க்கு விற்பனை ஆனது. கொப்பரை தேங்காய் 40 மூட்டைகளில் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 417-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.8 ஆயிரத்து 79-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 298-க்கு விற்பனை செய்யப்பட்டது. எள் 3 மூட்டைகளில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இது கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.142.69-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.155.89-க்கும் என மொத்தம் ரூ.23 ஆயிரத்து 753-க்கு விற்கப்பட்டது. நிலக்கடலை (காய்ந்தது) 107 மூட்டைகளில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.742-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.800-க்கும் என மொத்தம் ரூ.2 லட்சத்து 57 ஆயிரத்து 34-க்கு விற்பனை ஆனது. விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.4 லட்சத்து 80 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

சிவகிரி

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 417 மூட்டைகளில் நிலக்கடலைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.64.63-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.78.30-க்கும் என மொத்தம் ரூ.9 லட்சத்து 78 ஆயிரத்து 821-க்கு விற்பனை ஆனது.

கோபி

கோபி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. இதற்கு 154 மூட்டைகளில் கொப்பரை தேங்காய்கள் கொண்டு வரப்பட்டன. இதில் கொப்பரை தேங்காய் (கிலோ) குறைந்தபட்ச விலையாக ரூ.80.10-க்கும், அதிகபட்சமாக ரூ.83.27-க்கும் என மொத்தம் ரூ.5 லட்சத்து 20 ஆயிரத்து 584-க்கு விற்பனையானது.

அந்தியூர், சிவகிரி, ேகாபி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாய விளைபொருட்கள் ரூ.19லட்சத்து 79 ஆயிரத்து 905-க்கு ஏலம் போனது.

Tags:    

மேலும் செய்திகள்