அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.43½ லட்சத்துக்கு பருத்தி விற்பனை
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.43½ லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.
அந்தியூர்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.43½ லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
பருத்தி ஏலம்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைெபாருட்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், கள்ளிப்பட்டி, எண்ணமங்கலம், கோவிலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 2 ஆயிரத்து 63 மூட்டைகளில் பருத்தி விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 979-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 389-க்கும் என மொத்தம் ரூ.43 லட்சத்து 51 ஆயிரத்துக்கு ஏலம் போனது. 2 ஆயிரத்து 789 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது கிலோ ஒன்று ரூ.17.25-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.23.75-க்கும் என மொத்தம் ரூ.36 ஆயிரத்து 813-க்கு விற்பனை ஆனது.
கொப்பரை தேங்காய்
கொப்பரை தேங்காய் 105 மூட்டைகளில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 129-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 689-க்கும் என மொத்தம் ரூ.2 லட்சத்து 98 ஆயிரத்து 21-க்கு விற்பனை செய்யப்பட்டது. 4 மூட்டைகளில் எள்ளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது கிேலா ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.158.89-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.169.69-க்கும் என மொத்தம் ரூ.37 ஆயிரத்து 342-க்கு விற்கப்பட்டது.
ஈரோடு, திருப்பூர், கோவை, தர்மபுரி, பெருந்துறை, பொள்ளாச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து விவசாய விளைபொருட்களை வாங்கி சென்றனர்.