அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.4 கோடிக்கு பருத்தி ஏலம்

பருத்தி ஏலம்

Update: 2022-07-26 15:34 GMT

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.4 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

பருத்தி ஏலம்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதற்கு அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், சென்னம்பட்டி, வெள்ளித்திருப்பூர், ஒலகடம், கள்ளிப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 11 ஆயிரம் பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன.

இது (குவிண்டால்) ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.9 ஆயிரத்து 566-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.11 ஆயிரத்து 66-க்கும் என மொத்தம் ரூ.4 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டன.

வியாபாரிகள்

ஈரோடு, திருப்பூர், கோவை, பல்லடம், தர்மபுரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை ஏலம் எடுத்துச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்