நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு

நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் மாரிமுத்து ஆய்வு செய்தார்.

Update: 2023-04-11 16:38 GMT

திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் தங்களது ஒதுக்கப்பட்ட பணிகளை சரியாக செய்கின்றார்களா எனவும், தமிழக அரசின் இன்னூயிர் காப்போம் திட்டத்தை சரியாக பயன்படுத்தி வருகிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

அதன் பிறகு புறநோயாளிகளிடமும், அறுவை சிகிச்சை செய்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிகள் தங்கி உள்ள அனைத்து வார்டுகளுக்கு நேரிடையாக சென்று டாக்டர்கள் அளிக்கும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். கொரோனா நோயாளிகளுக்கு போதிய சிகிச்சை அளிக்கும் வகையில் எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும், மருத்துவமனை பகுதிகளை தூய்மையாக வைத்து இருக்க வேண்டும் எனவும் டாக்டர்களிடம் கூறினார்.

இந்த ஆய்வின் போது டாக்டர்கள் பாலகிருஷ்ணன், கார்த்திகேயன், சுகாதார செவிலியர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்