உதவி செயற்பொறியாளர்கள் அதிரடி மாற்றம்

மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் உதவி செயற்பொறியாளர்கள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டனர்.

Update: 2023-09-24 19:30 GMT

திருப்பரங்குன்றம் 

திருப்பரங்குன்றத்தில் உள்ள மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் எம்.முனீர் அஹமது பணியாற்றி வந்தார். இவர் மதுரை மாநகராட்சியின் 94-வது வார்டான திருநகர், 97, 98, மற்றும் 99-வது வார்டான திருப்பரங்குன்றம், 96-வது வார்டான ஹார்விப்பட்டி மற்றும் 100-வது வார்டான அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் 3 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வந்தார். இந்த நிலையில் முனீர் அஹமது உதவி செயற்பொறியாளராக பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி மாநகராட்சி காலி பணியிடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதே அலுவலகத்தில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு மேலாக திட்ட பிரிவு உதவிபொறியாளராக பணியாற்றி வந்த இந்திராதேவி உதவி செயற்பொறியாளராக பதவி உயர்வு பெற்று கரூர் மாநகராட்சி காலிப்பணி இடத்திற்கு மாற்றப்பட்டார். உதவி செயற்பொறியாளர் முனீர் அஹமது பணியாற்றிய பகுதியான 98-வது வார்டுக்கு (திருப்பரங்குன்றம்) உதவி பொறியாளரும், உதவிசெயற்பொறியாளர் இந்திரா தேவி பணியாற்றிய மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல திட்ட பிரிவுக்கு புதியதாக உதவி பொறியாளரையும் உடனடியாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்