குடிசை வீடுகள் குறித்து உதவி இயக்குனர் ஆய்வு
ஆலங்காயம் ஒன்றியத்தில் குடிசை வீடுகள் குறித்து உதவி இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும், ஊராட்சி மன்றத்தின் மூலம் எஸ்.இ.சி. அவாஸ் மற்றும் கே.வி.வி.டி. பட்டியலில் இடம் பெறாதவர்கள், வீட்டு வரி விதிப்பு பதிவேட்டில் குடிசை வீடு என இடம் பெற்றுள்ளவர்கள் வீடுகளை கணக்கெடுக்கும் பணி மிட்டூர், நரசிங்கபுரம் மற்றும் நிம்மியம்பட்டு ஊராட்சிகளில் நடைபெற்றுது.
இந்த பணிகளை திருப்பத்தூர் மாவட்ட உதவி இயக்குனர் (தணிக்கை) பிச்சாண்டி ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகள் ந. விநாயகம். எஸ்.சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.