உதவி கலெக்டர் பொறுப்பேற்பு
அரக்கோணம் புதிய உதவி கலெக்டர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அரக்கோணம்
ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் உதவி கலெக்டராக பணிபுரிந்து வந்த சிவதாஸ், பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து அரக்கோணம் புதிய உதவி கலெக்டராக ர.பாத்திமா நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். அவரை தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்ட துணை தலைவர் லட்சுமி நாராயணன், அரக்கோணம் கோட்ட செயலாளர் நெடுஞ்செழியன், வட்ட செயலாளர்கள் ராஜேஷ், தணிகாசலம் மற்றும் சங்க நிர்வாகிகள் சால்வை அணிவித்து, பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.