மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி;

Update:2022-12-06 00:16 IST

காரைக்குடி

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி காரைக்குடி செஞ்சை நகர் நல மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு காரைக்குடி நகர் மன்ற தலைவர் முத்துத்துரை தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர்களை டாக்டர் கார்த்திகேயனிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் லெட்சுமணன், நகர் மன்ற உறுப்பினர்கள் முகமது சித்திக், கார்த்திக், அமுதா, அஞ்சலிதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்