தொழிலாளி மீது தாக்குதல்

தொழிலாளியை தாக்கிய தந்தை-மகனை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-07-28 18:40 GMT

ஏர்வாடி:

ஏர்வாடியை சேர்ந்தவர் முகம்மது சித்திக் (வயது 46). தொழிலாளியான இவரிடம் ஏர்வாடி வடக்கு ரதவீதியை சேர்ந்த இசக்கிராஜ் என்பவர் தனது வீட்டை இடித்து அப்புறப்படுத்தி தருமாறு கேட்டுள்ளார். இதையடுத்து முகம்மது சித்திக் வேலையாட்களை அனுப்பி வீட்டை இடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே தெருவை சேர்ந்த சேகர் (55), அவரது மகன் சரவணன் (38) ஆகியோர் வேலையாட்களை வீட்டை இடிக்க விடாமல் தடுத்தனர். இதனை முகம்மது சித்திக் தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சேகர், சரவணன் ஆகியோர் சேர்ந்து முகம்மது சித்திக்கை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தந்தை, மகனை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்