சமையல் மாஸ்டர் மீது தாக்குதல்

மதுபாட்டிலை உடைத்ததை கண்டித்த சமையல் மாஸ்டரை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-10-26 17:09 GMT

அய்யலூர் அருகே உள்ள மணியக்காரன்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 32). சமையல் மாஸ்டர். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள பொதுக்கழிப்பறை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த 4 பேர் மதுபாட்டிலை பாதையில் உடைத்ததாக கூறப்படுகிறது. இதனை மாரிமுத்து கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து மாரிமுத்துவை கல் மற்றும் தென்னை மட்டையால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த மாரிமுத்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் மாரிமுத்து புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மணியக்காரன்பட்டியை சேர்ந்த சிவகண்ணன் (19), ரமேஷ் (21), பரமன் (56) மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோர் மாரிமுத்துவை தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 4 பேர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்