களக்காடு:
களக்காடு அருகே சிதம்பரபுரம் சேவியர் தெற்கு தெருவை சேர்ந்தவர் தேவஆசீர்வாதம் (வயது 62). கிறிஸ்தவ போதகரான இவரது வயலில் களக்காடு பஸ்நிலையம் கீழத்தெருவை சேர்ந்த பாண்டியராஜ் (49) விவசாய வேலைகள் செய்தார். இதற்கு தேவஆசீர்வாதம் தனது மகன் மூலம் இணையதளம் மூலம் ரூ.7 ஆயிரம் அனுப்பினார். ஆனால் அந்த பணம் போதாது என்று பாண்டியராஜ் கூறி வந்தார். இதுதொடர்பாக பாண்டியராஜ், தேவஆசீர்வாதம் மீது களக்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று தேவஆசீர்வாதம் களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அங்கு 2 பேருடன் வந்த பாண்டியராஜ், தேவஆசீர்வாதத்தை அவதூறாக பேசி தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதுபற்றிய புகாரின்பேரில் களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.