துப்புரவு பணியாளர் மீது தாக்குதல்

மங்கலம்பேட்டையில் துப்புரவு பணியாளர் மீது தாக்கப்பட்டாா்.

Update: 2023-03-14 18:45 GMT

விருத்தாசலம்:-

மங்கலம்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கன்னியம்மாள் (வயது 50). மங்கலம்பேட்டை பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ராஜசேகரை, அப்பகுதியில் உள்ள பொது கழிவறையை சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ராஜசேகர் கன்னியம்மாளை அசிங்கமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதேபோல கன்னியம்மாள், அவரது கணவர் கார்த்திகேயன் ஆகியோர் ராஜசேகரை அசிங்கமாக திட்டி தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் ராஜசேகர், கன்னியம்மாள், கார்த்திகேயன் ஆகியோர் மீது மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்