இறைச்சிக் கடைக்காரரை தாக்கி பணம்- மோட்டார் சைக்கிள் பறிப்பு

உடன்குடியில் இறைச்சிக் கடைக்காரரை தாக்கி பணம்- மோட்டார் சைக்கிளை பறித்த தந்தை, மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2023-04-11 18:45 GMT

குலசேகரன்பட்டினம்:

உடன்குடி கிறிஸ்தியாநகரம் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து மகன் ராஜ்குமார் (வயது 33). உடன்குடி தினசரி மார்க்கெட்டில் கறிக்கோழி கடை நடத்தி வருகிறார். இவர் தட்டார்மடம் சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த ஜேசுதாமஸ் பாண்டியன் என்பவரிடம் ரூ.21ஆயிரம் வாங்கியதாகவும், பின்னர் அந்த பணத்தை கொடுக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 8-ந்தேதி ஜேசுதாமஸ்பாண்டியன், அவரது மகன் தனிஷ்ஆல்வின் ஆகியோர் பணம் தராமல் எப்படி கறிக்கோழி வியாபாரம் செய்கிறாய் எனக்கூறி தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கி அவரிடமிருந்து ரூ.7,500-ஐயும், மோட்டார் சைக்கிளையும் பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்