கட்டிட ஒப்பந்ததாரர் மீது தாக்குதல்

பாளையங்கோட்டையில் கட்டிட ஒப்பந்ததாரர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update:2023-09-28 00:37 IST

நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோ நகரைச் சேர்ந்தவர் பிச்சுமணி (வயது 48). கட்டிட ஒப்பந்ததாரர். இவருக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த உறவினர்கள் ராஜன், கனகராஜிக்கும் இடையே வழிப்பாதை முடுக்கு சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று பாளையங்கோட்டை மகாராஜநகர் அருகே பிச்சுமணி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜன், கனகராஜ் ஆகியோர் பிச்சுமணி காரை வழிமறித்து இரும்பு கம்பியால் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் வழக்குப்பதிவு செய்து ராஜன், கனகராஜ் ஆகியோரை தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்