ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்

ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல் நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-20 17:09 GMT

தேவகோட்டை,

தேவகோட்டை சுப்பையா பிள்ளை தெருவில் வசிப்பவர் பிரேம்நவாஸ் (வயது 51). ஆட்டோ டிரைவர்.3 பெண் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோவை ஓட்டி சென்றார். டைமண்ட் சிட்டி அருகே செல்லும்போது ஒரு கும்பல் கையில் ஆயுதங்களுடன் ஆட்டோவை வழிமறித்தது. இதைக் கண்ட பயணம் செய்த 3 பெண்களும் அலறி அடித்து ஓடினர். பின்னர் அந்த கும்பல் ஆட்டோ டிரைவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடியது. இதுகுறித்து பிரேம் நவாஸ் தேவகோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரை தாக்கியதாக கோட்டையம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஹரிஹரன் (23), முழக்கட்டு தெருவை சேர்ந்த கட்டாரி என்ற கிருஷ்ணன் (23), நல்லாங்குடி மணிகண்டன் (21), களவன்குடி ரஞ்சித் குமார் (22), கார்ப்பரேஷன் தெரு ஆதி சரவணன் (20) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்