வாலிபர் மீது தாக்குதல்; 3 பேர் கைது
வள்ளியூர் அருகே வாலிபர் மீது தாக்குதல் நடத்தியதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வள்ளியூர் (தெற்கு):
தெற்கு கள்ளிகுளம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அஜய் சுதர்சன் (வயது 22). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (24) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை மனதில் வைத்துக் கொண்டு முத்துக்குமார் தனது நண்பர்களாக அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (27), ராதாபுரத்தை சேர்ந்த முத்துக்குமார் (22) ஆகியோருடன் சேர்ந்து அஜய் சுதர்சனை அவதூறாக பேசி தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அஜய் சுதர்சன் வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சகாயராபின்சாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, முத்துக்குமார் உள்பட 3 பேரை கைது செய்தார்.