வாலிபர் மீது தாக்குதல்; 2 பேர் கைது

முத்தையாபுரத்தில் வாலிபர் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-10-02 18:45 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள தங்கம்மாள்புரம் 4-வது தெருவை சேர்ந்தவர் முத்துலிங்கம். இவரது மகன் முத்துக்குமார் (வயது 20). மீனவர். இவர் நேற்று முன்தினம் அவரது மோட்டார் சைக்கிளில் முத்தையாபுரம் திருமாஜி முனியசாமி கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு நின்ற சூசை நகரைச் சேர்ந்த முத்தையா மகன் ரூபன் ராஜ் (21), திருமாஜி நகரைச் சேர்ந்த சிவனைந்தபெருமாள் மகன் ஆறுமுகம் என்ற அஜித் (21) ஆகிய 2 பேரும் அவரை கேலி செய்துள்ளனர்.

அதை முத்துக்குமார் தட்டிக்கேட்கவே, அவரை 2 பேரும் அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் கத்தியால் முத்துக்குமாரின் மோட்டார் சைக்கிளின் 2 டயர்களையும் வெட்டி சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து முத்துக்குமார் முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் வழக்குப்பதிவு செய்து ரூபன் ராஜ், ஆறுமுகம் ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்