முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து கருத்து கேட்பு

அழகமடை கிராமத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து கருத்து கேட்கப்பட்டது.;

Update:2023-08-23 00:21 IST
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து கருத்து கேட்பு

தொண்டி, 

திருவாடானை யூனியன் அஞ்சுகோட்டை ஊராட்சி அழகமடை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு மாதிரி தயாரிக்கப்பட்டு தலைமையாசிரியர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டு கருத்து கேட்கப்பட்டது. இதில் திருவாடானை தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் செங்கமடை சரவணன் கலந்து கொண்டார். இதனை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலை ராஜன், சந்திரமோகன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்