ஆண்களுக்கான 7-வது ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி கோப்பை

மன்னார்குடிக்கு வந்த ஆண்களுக்கான 7-வது ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி கோப்பையை கலெக்்டர் சாருஸ்ரீ அறிமுகம் செய்து வைத்தார்

Update: 2023-07-25 19:00 GMT

மன்னார்குடி,

மன்னார்குடிக்கு வந்த ஆண்களுக்கான 7-வது ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி கோப்பையை கலெக்்டர் சாருஸ்ரீ அறிமுகம் செய்து வைத்தார்

ஆக்கி போட்டிகள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஆக்கி இந்தியா, இணைந்து நடத்தும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான 7- வதுஆண்கள்ஆக்கி போட்டிகள் சென்னையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், தென்கொரியா, மலேசியா நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்க உள்ளன. போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்பட உள்ள கோப்பை தமிழகம் முழுவதும் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு கோப்பை எடுத்துவரப்பட்டது. இந்த கோப்பைக்கு மன்னார்குடி மக்கள் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

வரவேற்பு

தேரடியில் இருந்து மன்னார்குடியின் முக்கிய வீதிகள் வழியாக விளையாட்டு வீரர்கள் சூழ ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட கோப்பை பின்லே பள்ளியை அடைந்தது. அங்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே எஸ்.விஜயன், திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கோப்பையை அறிமுகப்படுத்தினர். இதைத்தொடர்ந்து ஆசிய சாம்பியன் ஆடவர் ஆக்கி போட்டிக்கான இலட்சினை வெளியிடப்பட்டது. அப்போது தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் கூறுகையில், கடந்த ஆண்டு உலகமே வியக்கும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சென்னையில் நடத்தி இந்தியாவுக்கு பெருமை தேடி தந்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என கூறினார்.தொடர்ந்து ஆக்கி கோப்பையின் சுற்றுப்பயணம் தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், மன்னார்குடி உதவி கலெக்டர் கீர்த்தனா மணி, மன்னார்குடி நகர்மன்றத் தலைவர் மன்னை சோழராஜன், திட்டக்குழு உறுப்பினர் சங்கர், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மன்னார்குடி தாசில்தார் கார்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்