பருவ மழை தொடங்க உள்ள நிலையில் அடையாறு கால்வாய் சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

வரதராஜபுரம் அருகே அடையாறு கால்வாய் சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2022-10-15 14:29 IST

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை அக்டோபர் 16-ம் தேதி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு 35 முதல் 75 சதவீதம் கூடுதலாக மழை பெய்யும் வாய்ப்புள்ளதால், அதை சமாளிக்க வேண்டிய அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து தயார் நிலையில் இருக்க தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு இன்னும் ஓரிரு நாட்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் படப்பை அடுத்த வரதராஜபுரம் அருகே அடையாறு கால்வாய் பகுதிகளில் காடு போல் இருக்கும் செடி கொடி மரங்களை அகற்றும் பணி முழுமையாக முடிவடையாமல் உள்ளது. ஒரு சில இடங்களில் கரையை பலப்படுத்தும் பணியும் முடிவடையாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:- பருவமழை தொடங்க உள்ள இரு தினங்களே உள்ள நிலையில் கால்வாய் சீரமைக்கும் பணிகள் மந்தமாக நடைபெறுகிறது.

எனவே கால்வாயில் காடு போல் இருக்கும் மரம் செடி கொடிகளை முழுமையாக அகற்ற மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்