ஆறுமுகநேரியில் விநாயகர் கோவில் வருசாபிஷேகம்
ஆறுமுகநேரியில் விநாயகர் கோவில் வருசாபிஷேகம் நடைபெற்றது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி விநாயகர் கோவில் தெருவில் அமைந்துள்ள செல்வ விநாயகர் மற்றும் அழகிய சுந்தர விநாயகர் கோவில் வருசாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
இதனை ஒட்டி கணபதி ஹோமமும், கும்ப பூஜையும், தொடர்ந்து கும்ப புறப்பாடு நடைபெற்றது. விமானத்திற்கு புனிதநீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்கார தீப ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.