அருளானந்தர் ஆலய தேர் பவனி

அருளானந்தர் ஆலய தேர் பவனி நடைபெற்றது;

Update: 2023-09-14 18:45 GMT

சாயல்குடி

சாயல்குடி அருகே நரிப்பையூர் ஊராட்சி ராயப்பபுரம் கிராமத்தில் புனித அருளானந்தர் ஆலய தேர் பவனி நடைபெற்றது. இவ்விழாவிற்கு பங்குத்தந்தை அருள்ஜோதி மைக்கேல் தலைமை தாங்கினார். தொன்போஸ்கோ அருட்தந்தையர்கள், பொன் சாக அருட் சகோதரிகள், ராயப்பபுரம் கிராம பொதுமக்கள் முன்னிலை வகித்தனர்.

கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதையொட்டி ஜெப மாலை, நற்கருணை பவனி, புது நன்மை, திருப்பலி, திருமுழுக்கும் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று முன்தினம் புனித அருளானந்தரின் தேர் பவனி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள், கிராம நிர்வாகிகள் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்