இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள்

திருப்பத்தூரில் இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள் நடைபெற்றது.

Update: 2022-06-07 19:07 GMT

திருப்பத்தூர்

கலைத்துறையில் சிறந்து விளங்குகிற இளம் கலைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட, மாநில அளவிலான கலைப்போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி திருப்பத்தூரில் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளுக்கான போட்டிகள் மாவட்ட அளவில் நடந்தது. இப்போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 79 இளம் கலைஞர்கள் பங்கு பெற்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும் முதல் பரிசு பெற்ற 5 இளம் கலைஞர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.இப்போட்டிக்கு கிருஷ்ணகிரி மு.திரிவேணி, வே.கல்யாணகுமார், மு.கருணா, வ.சி.சீனிவாசன் மற்றும் மதுரை கோ.செந்தமிழ்செல்வன் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.

போட்டிகளை கலை பண்பாட்டுத்துறை காஞ்சீபுரம் மண்டல உதவி இயக்குனர் பா.ஹேமநாதன் ஒருங்கிணைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்