வீட்டில் பதுக்கி வைத்து மது விற்றவர் கைது
திருவட்டார் அருகே வீட்டில் பதுக்கி வைத்து மது விற்றவர் கைது செய்யப்பட்டாா்.;
திருவட்டார்:
திருவட்டார் அருகே உள்ள ஆற்றூர் பகுதியில் வீட்டில் மறைத்து வைத்து மதுபாட்டில்கள் அதிக விலைக்கு விற்பதாக மதுவிலக்கு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று காலை மார்த்தாண்டம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ரெஜிஸ்குமார் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆற்றூர் பகுதியில் ஒரு வீட்டில் மறைத்து வைத்து அதிக விலைக்கு மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மறைத்து விற்பனை செய்த 117 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, விற்பனை செய்த பென்னி (வயது 57) என்பவரை போலீசார் கைது செய்தனர்.