சாலையை சீரமைக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டவர் கைது
சாலையை சீரமைக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள விசுவக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன்(வயது 30). இவர் வசிக்கும் தெருவில் சேறும், சகதியுமாக இருந்த இடத்தில் மண் கொட்டி நிரவப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில் சீரமைப்பு பணியை முழுமையாக முடிக்காததை கண்டித்தும், சாலையை சீரமைக்க வலியுறுத்தியும் அவர் விசுவகுடி- அன்னமங்கலம் சாலையில் வந்த அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து வழிவிடாமல் சாலை மறியல் செய்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட சிலம்பரசனை கைது செய்து அரும்பாவூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மாலையில் அவரை விடுதலை செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பும் ஏற்பட்டது.