தேன்கனிக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

Update: 2023-06-25 19:45 GMT

ஓசூர்

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள முளுவனப்பள்ளியை சேர்ந்தவர் மாதேசன் (வயது 32). ஓசூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஓசூரில் அரசு ஆஸ்பத்திரியில் பார்க்கிங்கில் தனது மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து வந்த போது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இது குறித்து மாதேசன் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மோட்டார்சைக்கிளை திருடியது தேன்கனிக்கோட்டை தாலுகா முளுவனப்பள்ளியை சேர்ந்த சந்தோஷ்குமார் (30) என தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்