தறித்தொழிலாளி வீட்டில் திருடியவர் கைது

பள்ளிபாளையம் அருகே தறித்தொழிலாளி வீட்டில் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-29 18:45 GMT

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் அடுத்த களியனூரை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 25). விசைத்தறி தொழிலாளி. நேற்றுமுன்தினம் பிரபாகரன், அவரது மனைவி 2 பேரும் வீட்ைட பூட்டிவிட்டு வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் வேலை முடிந்து வந்த அவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த அவர் வீட்டில் வைத்திருந்த ரூ.2,500 மற்றும் வெள்ளி செயினை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அதேபகுதியை சேர்ந்த ஜவகர் பாபு (28) என்பவர் பிரபாகரன் வீட்டில் திருடியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் ஜவகர் பாபுவை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்