கஞ்சா விற்ற 4 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். அப்போது கிருஷ்ணகிரி லைன்கொல்லை சிவா (வயது 22), ஓசூர் மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர். நகர் பீரேஷ்குமார் (29), ஆனேக்கல் அருண்குமார் (23), நரேந்திரா (23) ஆகியோர் கஞ்சா பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.