குட்கா கடத்திய வாலிபர் கைது

பேரிகை அருகே குட்கா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-01 18:45 GMT

ஓசூர்

பேரிகை போலீசார் வனத்துறை சோதனைச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா குப்பூரை சேர்ந்த சந்திரப்பா (வயது22) என்பதும், கர்நாடகாவில் இருந்து குட்கா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 14 கிலோ குட்கா, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்