கத்தி முனையில் மிரட்டி விவசாயியிடம் தங்க சங்கிலி பறிப்பு

ஓசூர் அருகே கத்தி முனையில் மிரட்டி விவசாயியிடம் தங்க சங்கிலி பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-21 18:45 GMT

ஓசூர்

ஓசூர் அருகே உள்ள மாரசந்திரத்தை சேர்ந்தவர் குருசாமி (வயது 60). விவசாயி. இவர் கடந்த 18-ந் தேதி அந்த பகுதியில் அமர்ந்து இருந்தார். அப்போது 2 மோட்டார்சைக்கிளில் 4 பேர் வந்தனர். அவர்கள் குருசாமியை கத்தி முனையில் மிரட்டி அவர் அணிந்திருந்த 1½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டனர்.

இது குறித்து குருசாமி அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தங்க சங்கிலியை பறித்தது பாகலூர் ஜி.மங்கலத்தைச் சேர்ந்த முரளி (27), அவரது கூட்டாளிகள் பெங்களூரு சாந்தபுரத்தைச் சேர்ந்த லோகேஷ், ஸ்ரீகாந்த், அப்பு ஆகியோர் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் முரளியை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஆகிய 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்