மது விற்ற 2 பேர் கைது

பாலக்கோடு பகுதியில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-01 18:45 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சிந்து தலைமையில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது புதூர் மாரியம்மன் கோவில், குத்தலஅள்ளி பகுதிகளை சேர்ந்த சரவணன், முத்துலிங்கம் ஆகிய 2 பேரும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்