இரும்பு குழாய்கள் திருடிய 2 பேர் கைது
இரும்பு குழாய்கள் திருடிய 2 பேர் கைது
மத்தூர்:
மத்தூர் அருகே கண்ணன்டஅள்ளி ஆண்டிகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 51). விவசாயி. இவர் கண்ணன்டஅள்ளி ஊராட்சி வார்டு உறுப்பினராக உள்ளார். இவர் கடந்த 7-ந் தேதி வீட்டில் போர்வெல் இரும்பு குழாய்களை வைத்திருந்தார். அதை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து மாதேஷ் மத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் இரும்பு குழாய்களை திருடியது கரடிகொல்லப்பட்டியை சேர்ந்த முருகன் (39), நந்தகிஷோர் (40) என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.