வத்தலக்குண்டு பகுதியில் கஞ்சா விற்ற 12 பேர் கைது

வத்தலக்குண்டு பகுதியில் கஞ்சா விற்ற 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-27 14:59 GMT

வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு, பள்ளபட்டி, சிலுக்குவார்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் தலைமையில் வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்லா மற்றும் தனிப்படை போலீசார், வத்தலக்குண்டு பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, வத்தலக்குண்டு அருகே ஆடுசாபட்டி மற்றும் பழைய வத்தலக்குண்டு பகுதியில் ஒரு கும்பல், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும், அங்கிருந்த 10-க்கும் மேற்பட்டோர் நாலாப்புறமாக தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் சுதாரித்துக்கொண்டு, தப்பி ஓட முயன்ற கும்பலை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த வினோத் என்ற வினோத்குமார் (26), வத்தலக்குண்டு அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்த கிஷோர்பாண்டி (26), பழைய வத்தலக்குண்டு கலைஞர் காலனியை சேர்ந்த மணிகண்டன் (32), மோகன்ராஜ் (20), ரமேஷ் (29), அழகுராஜா (21), பிரேம்குமார் (21), செல்வபாண்டி (38), நிலக்கோட்டை அருகே பள்ளபட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (22), குணசேகரன் (20), ஆத்தூர் விநாயகர்புரத்தை சேர்ந்த தினேஷ் (20), செட்டியபட்டியை சேர்ந்த ஆறுமுகபாண்டி (22) என்பதும், கஞ்சா விற்றதும் ெதரியவந்தது.

இதில் வினோத்குமார், கஞ்சா விற்பனை கும்பலுக்கு தலைவர் போல் செயல்பட்டு வந்துள்ளார். இதையடுத்து பிடிபட்ட 12 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்