பீர் பாட்டிலால் தந்தையை குத்திய பெயிண்டர் கைது
திண்டுக்கல் அருகே பீர் பாட்டிலால் தந்தையை குத்திய பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் அருகே வடக்கு மாலபட்டியை சேர்ந்தவர் சேதுராமன் (வயது56). கூலித்தொழிலாளி. இவருடைய மகன் ஜெகன் (22). பெயிண்டர். இந்த நிலையில் நேற்று மதுபோதையில் வீட்டுக்கு வந்த ஜெகன், தந்தையிடம் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அவர், தான் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து சேதுராமனின் கழுத்தில் குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து ஜெகனை கைது செய்தார்.