போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

கடையநல்லூரில் போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-12 19:00 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் பீர்முகமது தைக்கா தெருவை சேர்ந்தவர் ரகுமத்துல்லா (வயது 47). தள்ளுவண்டியில் சூப் கடை நடத்தி வரும் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவில் 7 வயது சிறுமி, ரகுமத்துல்லா வீட்டுக்குச் சென்று அவருடைய மகளை பெண்கள் அரபி பள்ளிக்கூடத்திற்கு அழைப்பதற்கு சென்றார். அப்போது, அந்த சிறுமிக்கு ரகுமத்துல்லா பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் புளியங்குடி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, ரகுமத்துல்லாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்